தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு 10-ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - முதன்மை கல்வி அலுவலர் தகவல்

அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று முதன்மை கல்வி அலுவலர் கூறியுள்ளார்.

Update: 2019-08-27 22:45 GMT
சிவகங்கை,

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- 2019-2020-ம் கல்வியாண்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்கள், தேசிய திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை இணையதளம் மூலம் வருகிற 7.9.2019 வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50 சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் கொடுக்க வேண்டும் தேர்வுகள் 2019 நவம்பர் மாதம் 3-ந் தேதி நடைபெறும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 7.9.2019. இது தொடர்பான மேலும் விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்