பாளையங்கோட்டையில் பரபரப்பு: செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்

பாளையங்கோட்டையில் செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-08-26 22:45 GMT
நெல்லை, 

பாளையங்கோட்டை சமாதானபுரத்தை சேர்ந்தவர் அப்பாக்குட்டி (வயது 36). இவர் நேற்று மாலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு செல்போன் கோபுரத்தில் ஏறி உச்சிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் செல்போன் கோபுரத்தில் ஏறி நின்ற அப்பாக்குட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர் சொன்ன பதிலையே, திரும்ப, திரும்ப கூறினார். இதையடுத்து தீயணைப்பு படை வீரர்கள் செல்போன் கோபுரத்தில் ஏறி அப்பாக்குட்டியை கீழே இறக்கி கொண்டு வந்தனர்.

பின்னர் போலீசார் அப்பாக்குட்டியிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்