மாவட்டம் முழுவதும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
மாவட்டம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடலூர்,
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்தும், சிலையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பல்வேறு இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அம்பேத்கர் சிலையை உடைத்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி கடலூர் அருகே உள்ள பெரியகங்கணாங்குப்பத்தில் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் ஒன்றிய நிர்வாகிகள் சம்பத், ராமச்சந்திரன், பழனிநாதன், மாநில நிர்வாகி தமிழரசன், புஷ்பலதா, சக்திவேல் உள்பட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர். அதேபோல் கடலூர் உழவர் சந்தை, கோண்டூர், குணமங்கலம் ஆகிய இடங்களிலும் மறியல் நடைபெற்றது.
கடலூர் முதுநகர் மணிக்கூண்டு அருகே ஒன்றிய செயலாளர் சுபாஷ், மாநில துணை செயலாளர் பழனிவேல் ஆகியோர் தலைமையிலும், ரெட்டிச்சாவடி பஸ்நிறுத்தம் அருகே ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையிலும், புதுக்கடையில் மாவட்ட கல்வி விழிப்புணர்வு அணி நிர்வாகி சண்முகம் தலைமையிலும், பண்ருட்டி ஆயில்மில் பஸ் நிறுத்தம் அருகே நகர செயலாளர் கார்த்திகேயன் தலைமையிலும், பண்ருட்டி பஸ் நிலையம் அருகே நகர செயலாளர் கிருஷ்ணன் தலைமையிலும், அண்ணாகிராமம் பஸ் நிறுத்தம் அருகே ஒன்றிய செயலாளர் அருள்செல்வன் தலைமையிலும், மாளிகை மேட்டில் தொகுதி அமைப்பாளர் அதியமான் தலைமையிலும் சாலை மறியல் நடந்தது.
விருத்தாசலம் பாலக்கரையில் நகர செயலாளர் முருகன் தலைமையில் தொகுதி செயலாளர் அய்யாயிரம், மாநில துணை செயலாளர்கள் ராஜ்குமார், நீதி வள்ளல், ஒன்றிய செயலாளர் சுப்பு ஜோதி, திருஞானம், அருள் ஆகியோர் முன்னிலையிலும், பெண்ணாடம் பழைய பேருந்து நிலையம் அருகில் நல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர்கள் ஆனந்தன், வேல்முருகன் தலைமையிலும், பெண்ணாடம் அருகே திட்டக்குடி- விருத்தாசலம் நெடுஞ்சாலையில் ஒடுக்கப்பட்டோர் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவன தலைவர் பத்மநாபன் தலைமையிலும் சாலை மறியல் நடைபெற்றது.
ராமநத்தத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மங்களூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சஞ்சய் காந்தி தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். இதில் வணிகர் அணி மாநில துணை செயலாளர் தடா கணேசன், வணிகர் அணி மாவட்ட அமைப்பாளர் பாசார் சுந்தரர், ஒன்றிய பொருளாளர் தொழுதூர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஸ்ரீமுஷ்ணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒன்றிய செயலாளர் ரவி, மாவட்ட வணிகர் பிரிவு மாரிமுத்து ஆகியோர் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். இதில் நகர செயலாளர் குப்புசாமி, பொருளாளர் தானிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிதம்பரம் காந்தி சிலை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட செயலாளர் பால.அறவாழி தலைமையிலும், பரங்கிப்பேட்டை தெத்து கடை அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நகர செயலாளர் முகமது இப்ராகிம் தலைமையிலும், நெல்லிக்குப்பத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் தலைமையில் நகர செயலாளர்கள் திருமாறன், நிர்வாகி இளம்பறை ஆகியோர் முன்னிலையிலும், பாலூரில் ஒன்றிய செயலாளர் நிலவன் தலைமையிலும், நல்லூர் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடலூர் மாவட்ட துணை செயலாளர் வீர.திராவிடமணி தலைமையில் வேப்பூரிலும், புதுப்பேட்டை அருகே உள்ள அங்குசெட்டிப்பாளையத்தில் ஒன்றிய செயலாளர் பிரகாஷ் தலைமையிலும் சாலை மறியல் நடந்தது.
குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் கோவிந்தன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நெய்வேலி என்.எல்.சி. ஆர்ச் கேட் எதிரே சென்னை-கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட பொருளாளர் துரை மருதமுத்து, நெய்வேலி தொகுதி செயலாளர் அதியமான், ஒன்றிய துணை செயலாளர் இளையராஜா, ஒன்றிய பொருளாளர் மீன் குமார், நெய்வேலி தொகுதி துணை செயலாளர் பாஷா பன்னீர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மந்தாரக்குப்பம் அடுத்த கெங்கைகொண்டான் பஸ் நிறுத்தம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கம்மாபுரம் ஒன்றிய செயலாளர் ஜோதிபாசு தலைமையில் மாநில நிர்வாகி குரு, மாவட்ட நிர்வாகி வடிவேல் ஆகியோர் முன்னிலையில் மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் மேல்பட்டாம்பாக்கம், குமராபுரம், காராமணிக்குப்பம், வல்லம்படுகை ஆகிய இடங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.
காட்டுமன்னார்கோவில் பேருந்து நிலையத்தில் மாநில நிர்வாகி பசுமை வளவன் தலைமையில் நகர செயலாளர் நாகராஜன் முன்னிலையில் மறியல் நடந்தது. இதில் நிர்வாகிகள் மணவாளன், ராவணன், பிரபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.