தொடக்கப்பள்ளி நிர்வாகம் குறித்த அரசாணையை திரும்ப பெற வேண்டும்; ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
தொடக்கப்பள்ளி நிர்வாகம் குறித்த அரசாணையை திரும்ப பெற வேண்டும் என்று ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது.
சிவகங்கை,
தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை நிர்வகிக்கும் பொறுப்பை அதே வளாகத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வசம் அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவை திரும்ப பெறா விட்டால் போராட்டம் செய்வோம் என்று ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் 35 ஆயிரத்து 414 ஆரம்பப்பள்ளிகளும், 9 ஆயிரத்து 208 நடுநிலைப்பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. கடந்த 25 ஆண்டுகாலமாக தனி நிர்வாக அமைப்பாகச் செயல்பட்டு வந்த தொடக்கக்கல்வித்துறையை மீண்டும் பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கும் முயற்சிகளை தமிழக அரசு படிப்படியாகச் செய்து வருகிறது.
சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி ஒரே வளாகத்தில் செயல்படும் அரசு மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை நிர்வகிக்கும் அதிகாரத்தை அதே வளாகத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வசம் அளிக்கப்பட்டுள்ளது.
ஒரே வளாகத்தில் செயல்படும் வெவ்வேறு பள்ளிகளுக்கு வேறு வேறு தலைமை ஆசிரியர்கள் இருக்கும் நிலையில், குறுவள மையங்களில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு பள்ளிக்கும் தலைமையாசிரியர் உள்ள நிலையிலும், இவ்வாறான உத்தரவு என்பது தொடக்கக்கல்வித்துறையை அழிக்கும் செயலாகவே கருதப்படும்.
மேலும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை நிர்வகிக்க வட்டாரக்கல்வி அலுவலர், மாவட்டக்கல்வி அலுவலர், முதன்மைக்கல்வி அலுவலர் எனப் பல்வேறு நிலைகளில் அதிகாரிகள் இருக்கும் நிலையில், ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் இன்னொரு பள்ளியை கண்காணிப்பார் என்பதும், ஆய்வு செய்வார் என்பதும் பொருத்தமானதல்ல. உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் அவர்களுக்கு இது கடுமையான பணிச் சுமையை ஏற்படுத்தும்.
ஏற்கனவே, மாணவர்கள் எண்ணிக்கையைக் காரணம் காட்டி 46 அரசு ஆரம்பப்பள்ளிகள் மூடப்பட்டு, நூலகமாக மாற்றப்பட்டுள்ள நிலையில், தொடக்கப்பள்ளி நிர்வாகம் தொடர்பாக வெளியிடப்படும் இதுபோன்ற அரசாணைகள் ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படும்.
எனவே தமிழக அரசு இந்த ஆணையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்துகிறது.
அவ்வாறு திரும்பப் பெறாவிட்டால் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலம் முழுவதும் தீவிரமான போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.