திருவள்ளூர் அருகே பார் மேலாளரை தாக்கியவர் கைது
திருவள்ளூர் அருகே பார் மேலாளரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 27). இவர் அதே பகுதியில் உள்ள ஓட்டலில் பார் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் ராஜசேகர் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த மணவாளநகர் கணேசபுரத்தை சேர்ந்த டார்ஜன் (37) என்பவர் அந்த பாருக் குள் அத்துமீறி நுழைந்து ராஜசேகரை தகாத வார்த்தைகள் பேசி அடித்து உதைத்துள்ளார்.
இது குறித்து அவர் மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் டார்ஜனை கைது செய்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.