மழைநீர் சேகரிப்பு: சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் 4 அடி உயர்வு மாநகராட்சி கமிஷனர் ஜி.பிரகாஷ் தகவல்
‘மழைநீர் சேகரிப்பு குறித்த தொடர் முயற்சியால் சென்னை நகரின் நிலத்தடி நீர்மட்டம் 4 அடி வரை உயர்ந்திருக்கிறது’, என்று மாநகராட்சி கமிஷனர் ஜி.பிரகாஷ் தெரிவித்தார்.
சென்னை,
சென்னை சர்வதேச மையம் சார்பில் சென்னையில் உள்ள நீர்நிலைகளை புனரமைப்பது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் மற்றும் எடுக்கப்பட வேண்டிய முயற்சிகள் குறித்த உயர்மட்டக்குழு கூட்டம், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள சென்னை பொருளாதார கல்வி நிறுவன வளாகத்தில் நேற்று மாலை நடந்தது.
இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜி.பிரகாஷ், ‘தந்தி’ டிவி இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன், தொழில் முனைவோர் ஷ்ரேயா ஜெயராமன், இந்திய சுற்றுச்சூழல் நிறுவனத்தின் நிறுவனர் அருண் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நீர்நிலைகளை புனரமைப்பது தொடர்பான ஆலோசனைகள், அது சார்ந்த திட்டங்கள் மற்றும் தங்கள் துறை மூலம் மேற்கொண்ட முயற்சிகள்-நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதில் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜி.பிரகாஷ் பேசியதாவது:-
சென்னையில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாநகராட்சி அனைத்து வகையிலான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக பல்வேறு நிலைகளில் ஆலோசனை நடத்தப்பட்டு, அதன்பேரில் தொடர் ஆய்வுகள் நகரம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டது. இதில் சென்னையில் உள்ள 210 குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் கணக்கிடப்பட்டன. முதற்கட்டமாக 100 நீர்நிலைகள் புனரமைக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள நீர்நிலைகளை வருகிற அக்டோபர் 30-ந்தேதிக்குள் புனரமைத்து விட வேண்டும் என்ற ரீதியில் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதுதவிர மாநகராட்சி குழுவினர் வீடு, வீடாக சென்று மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
சென்னையில் வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் என 14 லட்சம் எண்ணிக்கையில் பெரிய கட்டிடங்கள் உள்ளன. இதில் வார்டுக்கு 1,000 கட்டிடங்கள் எனும் ரீதியில் நகரின் 200 வார்டுகளில் 2 லட்சம் கட்டிடங்கள் முதற்கட்டமாக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளன. இந்த 2 லட்சம் கட்டிடங்களிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு முறையாக இருக்கிறதா? என்று ஆய்வு நடந்து வருகிறது.
அதேபோல ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 2½ லட்சம் வீடுகளில், 1 லட்சத்து 35 ஆயிரம் வீடுகளில் முறையான மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு உள்ளது. 60 ஆயிரம் வீடுகளில் இந்த கட்டமைப்பு இல்லை. மீதமுள்ள வீடுகளில் ஓரிரு குறைபாடுகள் உள்ளன. இவற்றை சரிசெய்ய மாநகராட்சி குழுவினர் ஆலோசனை வழங்கி வருகின்றனர். வருகிற அக்டோபர் 30-ந்தேதிக்குள் அதாவது பருவமழைக்கு முன்பாக மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை ஒருசேர உருவாக்கிட முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.
அதேபோல சாலைகளில் பெருக்கெடுத்து செல்லும் மழைநீரையும் சேகரிக்கும் முயற்சியாக மழைநீர் வடிகால்வாய் அமைப்புடன் உறிஞ்சு குழிகளும் அமைக்கப்பட்டு உள்ளன. அந்தவகையில் நகரின் சாலைகளில் 50 ஆயிரம் எண்ணிக்கையில் உறிஞ்சு குழாய்கள் அமைக்கப்பட உள்ளன. முதற்கட்டமாக 10 ஆயிரம் உறிஞ்சு குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மாநகராட்சி நிதியுடன், மக்களின் பங்களிப்பும் இதற்கு முக்கியம்.
மாநகராட்சி மேற்கொண்ட தொடர் நடவடிக்கை மற்றும் தற்போது பெய்த மழை காரணமாகவும் கிட்டத்தட்ட நிலத்தடி நீர்மட்டத்தின் அளவு 3 முதல் 4 அடி வரை உயர்ந்திருக்கிறது. மேலும் மாநகராட்சி கணக்கிட்ட 210 நீர்நிலைகளும் முழுமையாக தூர்வாரப்பட்டு அங்கு மழைநீர் சேமிக்கும் பட்சத்தில் நமக்கு 1 டி.எம்.சி. அளவு தண்ணீர் கிடைக்கும். 1½ டி.எம்.சி. நீர் பூமிக்கு நிலத்தடி நீராகவும் செல்லும். மழைநீர் சேமிப்பே அதற்கு பிரதானம். அதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் மாநகராட்சி முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.