சென்னை ஐகோர்ட்டு உத்தரவுபடி அனந்தசரஸ் குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி தொடக்கம்
சென்னை ஐகோர்ட்டு உத்தரவுபடி அனந்தசரஸ் குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி தொடங்கியது.;
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் தரிசன விழா கடந்த ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் இந்த மாதம் 17-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்தனர். இதையடுத்து கடந்த 17-ந்ே-தி நள்ளிரவு கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் சயன கோலத்தில் வைக்கப்பட்டார்.
மாவட்ட நிர்வாகம் மூலம் வரதராஜபெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள மற்றொரு குளத்தில் இருந்தே தண்ணீர் மோட்டார் மூலம் அனந்தசரஸ் குளத்திற்கு தண்ணீர் நிரப்பும் பணி தொடங்கியது. அனந்தசரஸ் குளத்தில் நல்ல தண்ணீரை நிரப்ப வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தில் நல்ல தண்ணீரை நிரப்ப வேண்டும் என தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கும், காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டது.
இதையடுத்து கோவில் வளாகத்தில் உள்ள நந்தவன தோட்டத்தில் புதிதாக 2 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு அதில் இருந்து நேற்று முதல் அனந்தசரஸ் குளத்திற்கு தண்ணீர் நிரப்பும் பணி தொடங்கியது.
இந்த நிலையில் நேற்று இரவு காஞ்சீபுரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.