அந்தியூர் அருகே கார்-மோட்டார்சைக்கிள் மோதல்; விசைத்தறி உரிமையாளர் சாவு
அந்தியூர் அருகே காரும் மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் விசைத்தறி உரிமையாளர் பரிதாபமாக இறந்தார்.
அந்தியூர்,
அந்தியூர் அருகே உள்ள தவுட்டுப்பாளையம் கோவிந்தன் வீதியை சேர்ந்தவர் சம்பத்குமார் (வயது 48). இவர் விசைத்தறிக்கூடம் வைத்து நடத்தி வந்தார். சம்பத்குமார் அத்தாணிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு தவுட்டுப்பாளையம் நோக்கி நேற்று முன்தினம் காலை திரும்பி கொண்டிருந்தார். தவுட்டுப்பாளையத்தில் ஒன்றிய அலுவலகம் அருகே சென்றபோது கோபியில் இருந்து அந்தியூர் நோக்கி சென்று கொண்டிருந்த காரும் மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சம்பத்குமார் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சம்பத்குமார் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த ஜெயபாலன் என்பவரை கைது செய்தார்.
இறந்த சம்பத்குமாருக்கு தேவி (38) என்ற மனைவியும், ஜனப்பிரியா என்ற மகளும் உள்ளனர்.