திருவாரூரில் உலக தாய்பால் வார விழா

திருவாரூரில் உலக தாய்ப்பால் வார விழாவை கலெக்டர் ஆனந்த் தொடங்கி வைத்தார்.

Update: 2019-08-23 21:30 GMT
திருவாரூர், 

திருவாரூர் வட்டம், தண்டலை ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் சார்பில் உலக தாய்ப்பால் வாரவிழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி வைத்து விழாவினை தொடங்கி வைத்தார்.

அப்போது ஆரோக்கிய குழந்தைகளுக்கான போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் திட்ட அலுவலர் ராஜம், ஒருங்கிணைந்த குழந்தைகள் துணை வளர்ச்சி வட்டார அலுவலர் புவனேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்