குற்றவாளியை கைது செய்ய வந்த கர்நாடக போலீசார் மீது பொதுமக்கள் தாக்குதல்-பேரிகை அருகே பரபரப்பு
பேரிகை அருகே குற்றவாளியை கைது செய்ய வந்த கர்நாடக போலீசார் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே உள்ள தீர்த்தம் பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவரது மகன் சங்கர்(வயது 35). இவர், கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக கர்நாடக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன் தினம் மாலை பொம்மனஹள்ளி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் தலைமையில் போலீசார், தீர்த்தம் பகுதிக்கு வந்து சங்கரை கைது செய்ய முயன்றனர்.
அப்போது கர்நாடக போலீசார் சீருடை அணிந்திருக்கவில்லை. இதனால் சங்கரின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரண்டு, நீங்கள் போலீஸ் இல்லை எனக் கூறி அவர்களை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதில், கர்நாடக போலீஸ் ஏட்டு ராமலிங்க கவுடா(44) என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு, முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு, பொம்மனஹள்ளி போலீசார், சங்கரை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் பேரிகை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.