எருமப்பட்டி பகுதியில் 3 கோடியில் குடிமராமத்து பணிகள்-கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு
எருமப்பட்டி பகுதியில் ரூ.3½ கோடியில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு செய்தார்.;
எருமப்பட்டி,
குடிமராமத்து திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொம்மசமுத்திரம் ஊராட்சியில் கணவாய்பட்டி குட்டை, ஆவல்நாய்க்கன்பட்டி குட்டை, பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சியில் சத்திரக்குட்டை ஆகிய குட்டைகள் தலா ரூ.1 லட்சத்தில் ஆழப்படுத்தப்பட்டு வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, அலங்காநத்தம் ஊராட்சி, பாலப்பட்டி ஏரி ரூ.5 லட்சத்தில் ஆழப்படுத்தப்பட்டு, கரைமேம்பாடு செய்யும் பணி நடைபெற்று வருவதையும், கொடிக்கால்புதூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.1.25 லட்சத்தில் கருங்கல் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளதையும் கலெக்டர் பார்வையிட்டார்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.2.15 கோடி மதிப்பீட்டில் 43 சிறுபாசன குளங்களும், தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் 152 குட்டைகளும் என மொத்தம் ரூ.3.67 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டு வருகின்றன. எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தலா ரூ.1 லட்சத்தில் பெரியக்குட்டை மற்றும் கந்துகாரன் குட்டை, பொம்மசமுத்திரம் ஊராட்சியில் கணவாய்பட்டி மற்றும் அவல்நாய்க்கன்பட்டி குட்டைகள், தேவராயபுரம் ஊராட்சியில் கருங்குட்டை, காவக்காரன்பட்டி ஊராட்சியில் வேட்டைக்காரன் குட்டைகள் ஆழப்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் கோணங்கிப்பட்டி ஊராட்சியில் காட்டுக்குட்டை, எம்.மேட்டுப்பட்டி ஊராட்சியில் கன்னிமார் குட்டை, பவித்திரம் ஊராட்சியில் கருங்காட்டு குட்டை, பவித்திரம்புதூர் ஊராட்சியில் நவலடிப்பட்டி அம்பாயிரம்மன் குட்டை, அம்பாயிபாளையம் உசலங்குட்டைகள், பொட்டிரெட்டிபட்டியில் ரெட்டை குட்டை, சத்திரக்குட்டை, மொசலன்குட்டை மற்றும் பொன்னேரி மொரசலான் குட்டைகள், சிவநாயக்கன்பட்டி ஊராட்சியில் பாப்பன்குட்டை, வரகூர் ஊராட்சியில் வண்ணான்குட்டை ஆகிய குட்டைகள் ஆழப்படுத்தப்பட்டு வரும் பணிகளும் என மொத்தம் 16 குட்டைகள் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் நீர்மேலாண்மை மேற்கொள்ள குடிமராமத்து திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
குடிமராமத்து திட்டத்தின் கீழ் அலங்காநத்தம் ஊராட்சி, பாலப்பட்டி ஏரி மற்றும் பவித்திரம்புதூர் ஊராட்சி நவலடிப்பட்டி ஒட்டப்புதூர் ஆகிய ஏரிகளில் தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாசன குளங்கள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேம்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முனியப்பன், அருளாளன் உள்பட ஒன்றிய பொறியாளர், உதவி பொறியாளர் பணி மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.