காடையாம்பட்டி பகுதியில் மழை: டேனிஷ்பேட்டை ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
காடையாம்பட்டி பகுதியில் பலத்த மழை பெய்ததால் டேனிஷ்பேட்டை ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
ஓமலூர்,
ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி வட்டாரங்களில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக கடுமையான வறட்சி நிலவியது. வறட்சியால் பொதுமக்கள் குடிநீருக்கே அவதிப்பட்டு வந்தனர். ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் தண்ணீரின்றி கருகின. மேலும் விவசாயிகள் பயிரிட்டிருந்த வாழை, கரும்பு, மரவள்ளிக்கிழங்கு போன்ற பயிர்களும் கருகின. காடையாம்பட்டி, ஓமலூர், தாரமங்கலம், எடப்பாடி வரை ஒரே நீர் ஆதாரமாக திகழும் மேற்கு சரபங்கா ஆறும் வறண்டு காணப்பட்டது.
இ்ந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி வட்டாரங்களில் தொடர்ந்து இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. ஏற்காடு மலைப்பகுதியிலும் பலத்த மழை பெய்து வருவதால் ஏற்காடு மலையில் இருந்து டேனிஷ்பேட்டை வழியாக வரும் மேற்கு சரபங்கா ஆற்றில் தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் ஒரு ஆண்டுக்கு பின் மேற்கு சரபங்கா ஆற்றில் தண்ணீர் வருகிறது என கேள்விப்பட்டு பண்ணப்பட்டி, காடையாம்பட்டி, சந்தைபேட்டை, வடகம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் மோட்டார் சைக்கிளில் டேனிஷ்பேட்டை உள்கோம்பை வனப்பகுதிக்கு வந்து ஆற்று நீரை பார்த்து சென்றனர்.
இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி இரவும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மேற்கு சரபங்கா ஆறு வழியாக, டேனிஷ்பேட்டை ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனிடையே டேனிஷ்பேட்டை உள்கோம்பை முனியப்பன் கோவில் அருகே மேற்கு சரபங்கா ஆற்றின் நடுவே மின் கம்பம் இருந்தது. தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், மின் கம்பம் அடித்துச்செல்லப்படும் நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள் உத்தரவின் பேரில், ஊழியர்கள் அந்த மின்கம்பத்தை அகற்றி, ஆற்றின் கரையோரம் நட்டனர்.
தொடர்ந்து மழை பெய்வதால் மேற்கு சரபங்கா ஆற்றிலும், டேனிஷ்பேட்டை ஏரிக்கும் தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.