ஓசூரில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது; விரட்டிய போது தவறி விழுந்ததில் கை முறிந்தது

ஓசூரில் பெண்ணிடம் நகையை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்ய விரட்டிய போது தவறி விழுந்ததில் அவரது கை முறிந்தது.

Update: 2019-08-23 22:30 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ளது பேரண்டப்பள்ளி. இங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் பெண் ஒருவர் தனது கணவருடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மர்ம ஆசாமி ஒருவர் அந்த பெண் அணிந்திருந்த நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றார்.

இது தொடர்பாக ஓசூர் அட்கோ போலீசில் அப்பெண் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் நகையை பறித்து சென்றது சூளகிரி பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 21) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை பிடிக்க நேற்று போலீசார் அங்கு சென்றனர். போலீசாரை பார்த்த உடன் பிரகாஷ் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அப்போது பிரகாஷ் கீழே தவறி விழுந்தார். இதில் அவரது கை முறிந்தது. பின்னர் அவர் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்