பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை; ஐ.டி.ஐ.மாணவர்கள் உள்பட 3 பேர் கைது

பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஐ.டி.ஐ. மாணவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-08-23 22:30 GMT
குளச்சல், 

கருங்கல் அருகே முள்ளங்கினாவிளை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய 2 சிறுவர்கள் மத்திகோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஐ.டி.ஐ. கல்லூரியில் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியின் அருகில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவியுடன் சிறுவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. சிறுவர்கள் மாணவியுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் மாணவியை அவரது வீட்டின் அருகில் உள்ள தோட்டத்துக்கு மாணவர்கள் அழைத்து சென்று பாலியல் தொல்லை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.

இந்தநிலையில் சிறுவர்களின் நண்பரான முள்ளங்கினாவிளையை அடுத்த வலியவிளையை சேர்ந்த லியோ(வயது 25) என்பவர் மாணவியிடம் செல்போனில் பேசினார். அப்போது அந்த மாணவியிடம் காதலிப்பதாக ஆசைவார்தை கூறினார். பின்னர், அவரை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து மாணவி குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி, ஐ.டி.ஐ. மாணவர்கள் மற்றும் லியோ மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தார்.

மேலும் செய்திகள்