போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அதிகபட்ச அபராதம் - போலீசார் அறிவிப்பு
மானாமதுரையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது அதிக பட்ச அபராதம் விதிக்கப்படும் என்று மானாமதுரை போலீசார் அறிவித்துள்ளனர்.
மானாமதுரை,
மானாமதுரை நகர் முழுவதும் வாகன விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. இதற்கு ஒரு பக்கம் வரவேற்பு இருந்தாலும் மரக்கடை வீதியில் திடீரென போக்குவரத்து போலீசார் நோ பார்க்கிங் போர்டு வைத்து கெடுபிடி செய்வதால் வர்த்தகம் பாதிப்பதாக வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். மானாமதுரை நகரை வைகை ஆறு, கீழ்கரை, மேல்கரை என இரண்டாக பிரிக்கிறது.
இரு கரைகளையும் சுற்றி குடியிருப்புகளும் வர்த்தக நிறுவனங்களும் அமைந்துள்ளன. இதில் மரக்கடை வீதியில் வங்கிகள், தனியார் பள்ளிகள், மரக்கடைகள், ஓட்டல்கள் என 200-க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பகுதியில் பழைய பஸ்நிலையம் செயல்பட்டு வருகிறது.
மரக்கடை வீதி வழியாக மானாமதுரை ரெயில்நிலையத்திற்கு செல்ல முடியும். இதனால் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து சென்னை, மதுரை, திருச்சி செல்ல பலரும் மரக்கடை வீதி வழியாக ரெயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். அவர்கள் போகும் வழியில் தேவையான பொருட்களை மரக்கடை வீதியில் வாங்கி செல்வது வழக்கம். இந்தநிலையில் மானாமதுரை போக்குவரத்து போலீசார் எவ்வித முன்னறிவிப்பும் செய்யாமல் மரக்கடை வீதியின் ஒரு பகுதியில் வாகனங்களை நிறுத்த தடை விதித்து நோ பார்க்கிங் போர்டு வைத்துள்ளனர்.
இதுபற்றி அறியாமல் நிறுத்தப்பட்ட வாகனங்களை போலீசார் பூட்டி சென்றனர். மேலும் மானாமதுரையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் அறிவித்து, அதன்படி ஸ்வைப் மிஷின் மூலம் அபராதம் வசூலித்தனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், இந்த பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. சுற்றுவட்டார கிராமமக்கள் இருசக்கர வாகனங்களில் வந்து பொருட்கள் வாங்கி செல்கின்றனர். இந்தநிலையில் எவ்வித அறிவிப்பும் செய்யாமல் போலீசார் நோ பார்க்கிங் என்று அறிவித்தது பொது மக்களையும், வியாபாரிகளையும் பாதிப்படைய வைத்துள்ளது. எனவே மாவட்ட போலீஸ் நிர்வாகம் இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.