மீன்பிடிக்க சென்றபோது கடலில் தவறி விழுந்து மீனவர் பலி

மீன்பிடிக்க சென்றபோது கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழந்தார்.

Update: 2019-08-23 22:30 GMT
கீழக்கரை,

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே சின்ன ஏர்வாடியை சேர்ந்த முனியசாமியின் மகன் முருகராஜ்(வயது 26). இவர் சிறிய வத்தையில் மீன்பிடிக்க சென்றார். இதற்காக விசைப்படகிற்கு தேவையான ஐஸ்கட்டி, டீசல் கேன்களை கொண்டு சென்றார்.

விசைப்படகு அருகில் சென்றவுடன் முருகராஜ் வத்தையின் மேல் ஏறிக்கொண்டு விசைப்படகிற்கு டீசல், மற்ற பொருட்களை ஏற்றி கொண்டிருந்தார்.

இந்த நிலையில் கால் தவறி முருகராஜ் கடலில் விழுந்தார். இதனையடுத்து மற்ற மீனவர்கள் முருகராஜை கடலுக்குள் இறங்கி தேடினர். சிறிது நேரம் கழித்து முருகராஜ் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.

இதுகுறித்து அவரது தந்தை முனியசாமி அளித்த புகாரின் பேரில் கீழக்கரை மரைன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்