நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சி.பி.ஐ ப.சிதம்பரத்தை கைது செய்ததை கண்டித்து நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்,
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தை ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் நேற்று முன்தினம் நள்ளிரவில் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். இதனை கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று நள்ளிரவு முதல் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக நேற்று நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பூங்கா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட தலைவர் ஷேக்நவீத் தலைமை தாங்கினார். அப்போது அவர்கள் ப.சிதம்பரம் கைதை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். இதில் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் விநாயகமூர்த்தி, முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஜி.ஆர்.சுப்பிரமணியம், பாச்சல் சீனிவாசன், மகளிர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் மகேஸ்வரி, வட்டார தலைவர்கள் குப்புசாமி, இளங்கோ உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.