நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையிலும் விநாயகர் சதுர்த்தி விழாவினை பொதுமக்கள் கொண்டாட வேண்டும் என நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.;
நாமக்கல்,
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற செப்டம்பர் 2-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையிலும் விநாயகர் சதுர்த்தி விழாவினை பொதுமக்கள் கொண்டாட வேண்டும். அப்போது மாவட்ட நிர்வாகம் குறிப்பிடப்பட்டு உள்ள இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
களிமண்ணாலான சிலைகளையும், எவ்வித ரசாயன கலவையற்ற விநாயகர் சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதி இல்லை.
எனவே தீங்கு விளைவிக்காத இயற்கை வர்ணங்களை உடைய விநாயகர் சிலைகளை உபயோகிக்க வேண்டும்.
களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை காவிரி ஆற்றில் குமாரபாளையம், பள்ளிபாளையம், மோகனூர் மற்றும் பரமத்தி வேலூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள படித்துறைகளில் பொதுமக்கள் பயன்பாட்டு பகுதியில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு கீழ் பகுதிகளில் கரைக்க வேண்டும்.