சேலம் வடக்கு தொகுதியில் ரூ.1½ கோடியில் திட்டப்பணிகள் தொடக்கம்
சேலம் வடக்கு தொகுதியின் ரூ.1½ கோடி திட்டப்பணி தொடக்கத்தில் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
சேலம்,
சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினரின் 2019-20-ம் ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் தொடங்கப்பட்டது. இதில் சேலம் அய்யந்திருமாளிகையில் கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பூஜையை தொடங்கி வைத்தார். இதில் பகுதி செயலாளர்கள் ராமச்சந்திரன், சாந்தமூர்த்தி, பேரூர் செயலாளர் தமிழரசன், துணை செயலாளர் லலிதா சுந்தர்ராஜன், வார்டு செயலாளர்கள் சுந்தர்ராஜன், மாது மற்றும் நிர்வாகி பச்சியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் வடக்கு தொகுதியில் மொத்தம் ரூ.1 கோடியே 53 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை, ரேஷன் கடை கட்டிட பணி உள்ளிட்ட திட்டப்பணிகள் தொடங்கப்பட்டன.