சேலத்தில் தொடர் மழை : கன்னங்குறிச்சி புதுஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
சேலத்தில் தொடர் மழையால் கன்னங்குறிச்சி புதுஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
கன்னங்குறிச்சி,
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. ஒரு சில நேரங்களில் பலத்த மழையும் பெய்தது. இந்த தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் தண்ணீர் தேங்க ஆரம்பித்துள்ளன. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. சேலம் மாநகரில் நேற்று முன்தினம் மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது.
பின்னர் மழை விட்டுவிட்டு பெய்து கொண்டே இருந்தது. தொடர் மழை காரணமாக ஏற்காடு அடிவாரத்தில் உள்ள தடுப்பணை நிரம்பி வழிகிறது. இந்த தண்ணீர் கொண்டம், கோம்பைகாடு, சீரங்கராமன் கோவில் வழியாக புது ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக வறண்டு காணப்பட்ட புதுஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் ஓமலூர், வாழப்பாடி, ஆத்தூர் உள்பட பல்வேறு இடங்களிலும் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் மொத்தம் 294.6 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. அதன் சராசரி அளவு 19.6 மி.மீ. ஆகும். இதில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 84.2 மி.மீ. மழை பதிவானது.
வாழப்பாடி-40, மேட்டூர்-28.6, ஓமலூர்-25.4, சேலம்-24, ஆணைமடுவு-20, கரியகோவில்-18, காடையாம்பட்டி-17.6, பெத்தநாயக்கன்பாளையம்-15, ஆத்தூர்-8.4, தம்மம்பட்டி-5.2, வீரகனூர்-4, எடப்பாடி-2.2, சங்ககிரி-2.