ஆண்டு திருவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
ஆண்டு திருவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா அன்னை பேராலயம் உள்ளது. இந்த பேராலய ஆண்டு திருவிழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருவார்கள்
இதை முன்னிட்டு பாதுகாப்பு முன்னேற்பாடாக பேராலயத்தை சுற்றி சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக பேராலயத்தின் 4 புறங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பேராலயத்தின் நுழைவு வாயிலில் பக்தர்களின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
விடுதிகளில் சோதனை
மேலும் வேளாங்கண்ணியில் உள்ள விடுதிகளிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விடுதிகளில் தங்கியிருப்பவர்களின் முகவரி மற்றும் அடையாள அட்டைகள் உள்ளிட்டவை சரியாக உள்ளதா? என்றும் ஆய்வு செய்து வருகின்றனர். விழாவில் திருட்டு, செயின் பறிப்பு ஆகிய குற்றங்களை தடுக்கும் வகையில் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.