கும்மிடிப்பூண்டி அருகே வீடு புகுந்து பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு: தடுத்த கணவர், மகன் மீது தாக்குதல்
கும்மிடிப்பூண்டி அருகே வீடு புகுந்து பெண்ணிடம் 10 பவுன் நகை பறிக்கப்பட்டது. இதை தடுத்த கணவர், மகனை அவர்கள் தாக்கினர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள சின்னபுலியூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமணய்யா (வயது 50). விவசாயி. இவரது மனைவி யசோதா(35). இவர்கள் தங்களது வீட்டின் அருகே பெட்டிக்கடை ஒன்றையும் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பக்க இரும்பு கேட் பூட்டப்பட்ட நிலையில் அதனை அடுத்துள்ள வராண்டாவில் ரமணய்யாவும், வீட்டில் உள்ள தனியறையில் அவரது மனைவி யசோதாவும் தூங்கி கொண்டிருந்தனர். வீட்டின் மேல் மாடியில் உள்ள அறைகளில் மகன்கள் யுவராஜ் (24), செல்வம் (23) ஆகியோரும் தூங்கி கொண்டிருந்தனர்.
நள்ளிரவில் வீட்டின் முன்பக்க இரும்பு கேட்டின் பூட்டை சாவி போட்டு திறந்து வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர்கள் 2 பேர் அங்கு தனியறையில் தூங்கி கொண்டிருந்த யசோதா அணிந்திருந்த 10 பவுன் தங்கச்சங்கிலியை கட்டர் மூலம் அறுத்து எடுத்துக்கொண்டனர். அப்போது திடுக்கிட்டு எழுந்த யசோதா கூச்சலிட்டார்.
இதனையடுத்து அவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியே ஓடினர்.
வராண்டாவில் படுத்து தூங்கி கொண்டிருந்த ரமணய்யா, மனைவியின் அலறல் சத்தம் கேட்டு எழுந்து மர்மநபர்களை பிடிக்க முயன்றார். அவர்களில் ஒருவர் ரமணய்யாவை கூர்மையான இரும்பு கம்பியால் தலையில் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.
இதற்கிடையில் சத்தம் கேட்டு கண்விழித்து மாடியில் எழுந்து கீழே இறங்கி வந்த மகன் யுவராஜ், மர்மநபர்களில் ஒருவரை ரோடு வரை துரத்திச்சென்று மடக்கி பிடித்தார். அப்போது யுவராஜின் இடது கையில் இரும்பு கம்பியால் தாக்கிய அவர் எனது கையில் கத்தி உள்ளது. தேவையில்லாமல் சாகாதே என மிரட்டி விட்டு தப்பினார். மர்ம நபர்கள் இருவரும் வீட்டுக்கு எதிரே உள்ள தைல மரத்தோப்பிற்குள் புகுந்து அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
இந்த சம்பவம் நடைபெறுவதற்கு முன்னதாக வீட்டின் அருகே உள்ள ரமணய்யாவின் பெட்டிக்கடையின் பூட்டை உடைந்து அங்கிருந்து ரூ.2 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்று உள்ளது தெரியவந்தது. மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் தாக்கியதில் காயம் அடைந்த விவசாயி ரமணய்யாவிற்கு தலையில் மொத்தம் 15 தையல்கள் போடப்பட்டு உள்ளது. அவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். சம்பவ இடத்திற்கு கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனா தத் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இந்த துணிகர கொள்ளை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பழைய குற்றவாளிகள் 4 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.