நாமக்கல்லில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

Update: 2019-08-21 22:30 GMT
நாமக்கல், 

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். இதில் குடும்ப ஓய்வூதியம் வழங்க கோருதல், குடும்ப பாதுகாப்பு நிதி வழங்க கோருதல், விடுப்பில் சென்ற நாட்களை முறைப்படுத்தி உத்தரவிட கோருதல், பணி காலத்தில் இறந்த ஊழியரின் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம் மற்றும் இதர பணப்பயன்கள் வழங்குமாறு கோருதல் என பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 46 மனுக்களை ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் கலெக்டரிடம் வழங்கினர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அவற்றை பரிசீலித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது துரித நடவடிக்கை எடுத்து தீர்வுகாண உத்தரவிட்டார்.

பின்னர் கலெக்டர், ஓய்வூதியர்கள் அனைவரும் நம்மை போன்று பல்வேறு அரசுத்துறைகளில் நமக்கு முன்பு பணி செய்தவர்கள்தான் என்பதை கருத்தில் கொண்டு முழு ஈடுபாட்டுடன் இந்த மனுக்களுக்கு விரைந்து தீர்வு வழங்க வேண்டும் என கலெக்டர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் சென்னை ஓய்வூதிய இயக்கக இணை இயக்குனர் இளங்கோவன், துணை இயக்குனர்கள் வேலாயுதம், மதிவாணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், நந்தகுமார் (கணக்குகள்), மாவட்ட கருவூல அலுவலர் சுப்புலட்சுமி, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரேமலதா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், ஓய்வூதியர்கள், ஓய்வூதியர் சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்