குடிமராமத்து பணிகள்- மனோரஞ்சிதம் நாகராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

மத்தூர் ஒன்றியத்தில் ராஜீவ்நகர் சோழன்குட்டை ஏரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடிமராமத்து பணிகளை மனோரஞ்சிதம் நாகராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

Update: 2019-08-21 22:45 GMT
மத்தூர், 

மத்தூர் ஒன்றியத்தில் குடி மராமத்து பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. கண்ணன்டஅள்ளி ஊராட்சி ராஜீவ்நகர் சோழன்குட்டை ஏரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஊத்தங்கரை மனோரஞ்சிதம் நாகராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்தார். மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தமிழரசன், துரைசாமி, ஒன்றிய பொறியாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரூ.5 லட்சத்தில் நடைபெறும் இந்த குடிமராமத்து பணிகள் விரைவில் முடிக்கப்படும் என மனோரஞ்சிதம் நாகராஜ் எம்.எல்.ஏ. கூறினார்.

இதில், மத்தூர் கூட்டுறவு கடன் சங்க தலைவர் சக்தி, ஊத்தங்கரை நிலவள வங்கி துணைத்தலைவர் முருகன், மாடரஅள்ளி மற்றும் குன்னத்தூர் கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் பிரியவள்ளி பூபாலன், பெருமாள், பனைவெல்ல கூட்டுறவு சங்க தலைவர் ராஜேந்திரன், முன்னாள் ஆவின் மாவட்ட தலைவர் தென்னரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்