தடை செய்யப்பட்ட 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்; அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
புதுவையில் தடை செய்யப்பட்ட 2 டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி,
புதுவையில் ஒருமுறை பயன்படுத்தப்படும் 10 விதமான பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த 2-ந்தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தடையை மீறி இத்தகைய பொருட்கள் உபயோகத்தில் இருந்து வந்தன.
இதுதொடர்பாக பல்வேறு புகார்கள் அரசுக்கு சென்றன. இதைத்தொடர்ந்து சுற்றுச்சூழல் துறை இயக்குனர் ஸ்மிதா, உள்ளாட்சித்துறை இயக்குனர் மலர்க்கண்ணன், புதுவை நகராட்சி ஆணையர் அர்ஜூன் ராமகிருஷ்ணன், முதுநிலை என்ஜினீயர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் நேற்று புதுவை நகர பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது 6 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த கடைகளில் இருந்து சுமார் ரூ.6 லட்சம் மதிப்புள்ள 2 டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளர்களுக்கு முதல்கட்டமாக எச்சரிக்கை விடுத்தனர். இதையும் மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்றால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
புதுவையில் உள்ள பெரிய, சிறிய கடைகள் அனைத்திலும் அதிகாரிகள் அடுத்து வரும் நாட்களில் திடீர் சோதனை மேற்கொள்ள உள்ளனர்.