182 மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை - நவாஸ்கனி எம்.பி. வழங்கினார்
ராமநாதபுரத்தில் 182 மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையை நவாஸ்கனி எம்.பி. வழங்கினார்.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்த மாணவ-மாணவிகள் மற்றும் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பிற்கு பணம் கட்ட முடியாமல் சிரமம் அடைந்து வரும் மாணவ-மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி தனது சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்குவதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார். இதை தொடர்ந்து ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏராளமானோர்கல்வி உதவித்தொகை கேட்டு விண்ணப்பம் செய்தனர்.
இதையடுத்து தனிக்குழு அமைத்து தகுதியுடைய 182 மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து கல்வி உதவித்தொகை வழங்கும் விழா ராமநாதபுரம் பாசிபட்டறை தெருவில் உள்ள மகாலில் நடந்தது. விழாவிற்கு ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி தலைமை தாங்கினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் காதர் மொகைதீன் முன்னிலை வகித்தார். பின்பு ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி தனது சொந்த செலவில் 182 மாணவ-மாணவிகளுக்கு வழங்கிய ரூ.47 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித் தொகையை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் காதர் மொகைதீன் வழங்கினார்.
விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி பேசியதாவது:- பதவி ஏற்பதற்கு முன்பாகவே வர்த்தகத்தின் மூலமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக எஸ்.டி. கூரியர் சார்பில் கல்வி உதவி தொகையை ஏழை-எளிய மாணவர்களுக்கு வழங்கி வருகிறோம். தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்தவாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இந்த பகுதியை பின்தங்கிய பகுதியில் இருந்து முன்னேறிய பகுதியாக மாற்ற முதற்கட்டமாக கல்வியில் முன்னேற்றம் வேண்டும்.
ஒரு சமூகம் கல்வியில் முன்னேறினால் தான் அதன் மூலம் பொருளாதாரத்தில் முன்னேறி முன்னேற்ற பகுதியாக மாற்ற முடியும் என்ற நோக்கத்தில் வெற்றி பெற்ற உடனேயே இலவச உயர் கல்வி திட்டம்அறிவிக்கப்பட்டது. சுமார் 60 மாணவர்களுக்கான உயர் கல்வி திட்டத்திற்கு உதவி செய்யலாம் என்றஎண்ணத்தில் அறிவித்தேன். அவர்கள் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு நன்கு படித்து அதிக மதிப்பெண்கள் பெற்று படிப்பதற்கு ஆர்வத்தடன் இருக்கக்கூடிய பொருளாதார தடையால் உயர் கல்வியை பெற முடியாத மாணவ-மாணவிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்று இந்த திட்டத்தை அறிவித்தேன்.
வரும் ஆண்டுகளில் மேலும் எண்ணிக்கையை அதிகரிக்க ஆர்வமாக உள்ளோம். இந்த உதவித்தொகை பெறக்கூடியவர்கள் எந்த மனக்கசப்பும் அடைய தேவையில்லை. எங்களது வர்த்தகத்தில் கிடைத்த வருமானத்தை வைத்து தான் மாணவ-மாணவிகளுக்கு உதவி செய்துள்ளோம். இப்போது கல்வி உதவி தொகை பெறுவர்கள் பிற்காலத்தில் கல்விக்கு உதவி செய்பவர்களாக மாற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் கடையநல்லூர் எம்.எல்.ஏ. முகம்மது அபுபக்கர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜகான், எஸ்.டி.கூரியர் நிறுவனத்தின் சேர்மன் அன்சாரி, ராமநாதபுரம் நகர் செயலாளர் கலியத்துல்லா, ஏர்வாடி சாலிக் ரகுமான் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.