வானவில் : 3 டி படமெடுக்கும் கூலிங் கிளாஸ்
ஸ்னாப் ஸ்பெக்டகிள்ஸ் நிறுவனம் புதிய தலைமுறை கூலிங்கிளாஸை அறிமுகம் செய்துள்ளது.
இந்த கூலிங்கிளாஸ் கண்ணுக்கு குளிர்ச்சியை அளிப்பதோடு நீங்கள் விரும்பும் காட்சிகளை முப்பரிமாண கோணத்தில் (3டி) படமெடுக்கவும் உதவும். இதை உடனடியாக உங்கள் நண்பர்களுக்கு பகிரவும் முடியும். இதன் விலை ரூ.27 ஆயிரமாகும். இந்த குளிர் கண்ணாடி பிரேமில் சிறிய ரக கேமரா உள்ளது.
இதை வயர்லெஸ் அடிப்படையில் ஸ்மார்ட்போன் மூலம் செயல்படுத்த முடியும். இதில் உள்ள இரண்டு கேமராக்கள் முப்பரிமாண கோணத்தில் படமெடுக்க உதவுகிறது. ஒரு காட்சியை நீங்கள் உங்கள் கண்ணால் காணும் கோணத்தில் படமெடுக்கும்.