பள்ளிபாளையம் ஒன்றியத்தில் 15 இடங்களில் அ.தி.மு.க. கொடியேற்று விழா

பள்ளிபாளையம் ஒன்றியத்தில் 15 இடங்களில் நடைபெற்ற அ.தி.மு.க. கொடியேற்று விழாவில் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டார்.

Update: 2019-08-20 21:30 GMT
பள்ளிபாளையம், 

பள்ளிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆலாம்பாளையம், சமயசங்கிலி, காடச்சநல்லூர், ஓடப்பள்ளி, பாப்பம்பாளையம், கொக்கராயன்பேட்டை, பள்ளிபாளையம், அக்ரஹாரம், களியனூர் ஆகிய ஊராட்சிகளில் 15 இடங்களில் அ.தி.மு.க. கொடியேற்று விழா, கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது.

இதில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கல்வெட்டுகளை திறந்து வைத்து, கட்சி கொடியேற்றி வைத்து பேசினார். நிகழ்ச்சிகளில் பள்ளிபாளையம் ஒன்றிய முன்னாள் தலைவர் செந்தில், பள்ளிபாளையம் நகராட்சி முன்னாள் தலைவர் வெள்ளிங்கிரி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மாதேஸ்வரன், முனியப்பன், செல்லதுரை, பள்ளிபாளையம் நகராட்சி முன்னாள் தலைவர் சுப்பிரமணியம், முன்னாள் ஊராட்சி கவுன்சிலர்கள், கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்