விளைச்சல்-வரத்து குறைவு எதிரொலி: வெங்காயம் விலை ‘கிடுகிடு’ உயர்வு
விளைச்சல்-வரத்து குறைவு எதிரொலி காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்துள்ளது. அதேவேளை வரத்து அதிகமானதால் பழங்களின் விலை குறைந்திருக்கிறது.
சென்னை,
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் காய்கறி இறக்குமதி செய்யப்படுகிறது. அந்தவகையில் தினமும் 350 முதல் 400 லாரிகள் வரையில் காய்கறி கொண்டுவரப்படுகின்றன. இந்தநிலையில் விளைச்சல் குறைந்ததின் எதிரொலியாக வெங்காயத்தின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்திருக்கிறது. அதேவேளை தக்காளி, அவரைக்காய், சவ்சவ், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் விலை குறைந்து உள்ளது.
இதுகுறித்து சென்னை கோயம்பேடு அனைத்து வியாபாரிகள் நலவாழ்வு சங்கத்தின் செயலாளர் எம்.அப்துல்காதர் கூறியதாவது:-
தமிழகத்தின் சில பகுதிகள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தே வெங்காயம் அதிகளவில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்படுகிறது. இந்தநிலையில் விளைச்சல் குறைந்து போனதால் வரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது மராட்டிய மாநிலத்தில் விளையும் வெங்காயத்தை (சோலாப்பூர்) நம்பி மட்டுமே இருக்கிறோம். இதனால் தினமும் 40 முதல் 50 லோடுகள் வரை கொண்டுவரப்பட்ட வெங்காயம், தற்போது 30 லோடுகள் வரையிலேயே உள்ளது. இதனால் வெங்காயத்தின் விலை ரூ.10 அதிகரித்து இருக்கிறது.
அதேவேளை வரத்து அதிகரித்ததின் எதிரொலியாக இதர காய்கறிகள் விலை ஓரளவு குறைந்துள்ளது. குறிப்பாக கடந்த வாரம் ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது ரூ.15-க்கு விற்பனை ஆகிறது. வரத்து மீதான தாக்கம் காரணமாக காய்கறி விலையில் மாறுபாடு ஏற்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை நிலவரம் (ஒரு கிலோ) வருமாறு:-
பல்லாரி- ரூ.35 (ரூ.25), உருளைக்கிழங்கு- ரூ.25 முதல் ரூ.35 வரை (மாற்றம் இல்லை), கேரட்- ரூ.45 முதல் ரூ.50 வரை, பீன்ஸ்- ரூ.60 (ரூ.70), நூக்கல்- ரூ.25 முதல் ரூ.30 வரை, சவ்சவ்- ரூ.25 (ரூ.35), பீட்ரூட்- ரூ.30 (ரூ.40), முட்டைக்கோஸ்- ரூ.18 முதல் ரூ.20 வரை (மாற்றம் இல்லை), மிளகாய்- ரூ.30 (ரூ.40), இஞ்சி- ரூ.180 (மாற்றம் இல்லை), சேனைக்கிழங்கு- ரூ.35 (மாற்றம் இல்லை), சேப்பங்கிழங்கு- ரூ.45 (மாற்றம் இல்லை), கத்திரிக்காய்- ரூ.30 முதல் ரூ.40 வரை (ரூ.40 முதல் ரூ.50 வரை), வெண்டைக்காய்- ரூ.25 முதல் ரூ.30 வரை (ரூ.40), அவரைக்காய்- ரூ.25 (ரூ.40), கோவைக்காய்- ரூ.20 (மாற்றம் இல்லை), கொத்தவரங்காய்- ரூ.30 (மாற்றம் இல்லை), பாகற்காய்(பன்னீர்)- ரூ.30 (ரூ.40), பெரிய பாகற்காய் - ரூ.30 (ரூ.40), முருங்கைக்காய்- ரூ.50 முதல் ரூ.60 வரை (மாற்றம் இல்லை), முள்ளங்கி- ரூ.15 (ரூ.20), வெள்ளரிக்காய்- ரூ.25 (ரூ.30), புடலங்காய்- ரூ.30 (ரூ.35), தக்காளி- ரூ.15 (ரூ.40), காலிபிளவர்(ஒன்று)- ரூ.30 (மாற்றம் இல்லை), பீர்க்கங் காய்- ரூ.40 (ரூ.45), சுரைக்காய்- ரூ.20 (ரூ.30), சாம்பார் வெங்காயம்- ரூ.60 (மாற்றம் இல்லை), தேங்காய்- ரூ.30 (ரூ.25 முதல் ரூ.30 வரை), வாழைக்காய் (ஒன்று) - ரூ.10 (மாற்றம் இல்லை).
(குறிப்பு:- அடைப்புக்குறிக் குள் கடந்த வார விலை)
கோயம்பேடு மார்க்கெட்டில் பழங்களின் வரத்து அதிகமாகவே உள்ளது. இதனால் பழங்களின் விலை ஓரளவு குறைந்தே காணப்படுகிறது. இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் அங்காடி நிர்வாகக்குழு உறுப்பினர் பழக்கடை கே.ஜெயராமன் கூறியதாவது:-
கடந்த வாரம் வாஷிங்டன் ஆப்பிள் ரூ.200-க்கு விற்பனை ஆனது. இப்போது அது ரூ.180 ஆக குறைந்திருக்கிறது. அதேபோல ரூ.150 வரை விற்பனையான சிம்லா ஆப்பிள் ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆரஞ்சு விலை ரூ.20 குறைந்துள்ளது. இதுதவிர இதர பழங்களின் விலையில் ரூ.10 குறைந்து காணப்படுகிறது.
தற்போது ஆப்பிள் சீசனையொட்டி கோயம்பேட்டில் அதிகளவு ஆப்பிள் இறக்குமதி செய்யப்படுகிறது. விரைவில் காஷ்மீர் ரக ஆப்பிள் வரவுள்ளது. எனவே வரும் நாட்களில் ஆப்பிள் விலை ரூ.80 முதல் ரூ.90 வரையில் இறங்கினாலும் ஆச்சரியம் இல்லை.
பழங்களின் விலை நிலவரம் வருமாறு:- (கிலோவில்)
வாஷிங்டன் ஆப்பிள்- ரூ.180, சிம்லா ஆப்பிள்- ரூ.120, காஷ்மீர் ஆப்பிள் (டெலிசியஸ்)- வரத்து இல்லை, மாதுளை- ரூ.120, சாத்துக் குடி- ரூ.60, ஆரஞ்சு (கமலா)- ரூ.100, ஆரஞ்சு (எகிப்து) - ரூ.100, கருப்பு திராட்சை- ரூ.70, பன்னீர் திராட்சை- ரூ.80, திராட்சை (சீட்லெஸ்)- வரத்து இல்லை, சப்போட்டா- ரூ.40, கொய்யா- ரூ.40, இலந்தைபழம்- வரத்து இல்லை, தர்பீஸ்- ரூ.15, அன்னாசிபழம்- ரூ.50, வாழை (தார்)- ரூ.350 முதல் ரூ.500 வரை. இவ்வாறு அவர் கூறினார்.