காமராஜர் ஆட்சிக்காலத்தில் 27 ஆயிரம் பள்ளிகள் திறக்கப்பட்டன; பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன் பேச்சு
காமராஜர் ஆட்சிக் காலத்தில் 27 ஆயிரம் பள்ளிகள் திறக்கப் பட்டன என்று பெருந் தலைவர் மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேசினார்.
திருப்புவனம்,
சிவகங்கை தெற்கு மாவட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் காமராஜர் 117-வது பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்புவனத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தெற்கு மாவட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சியின் அமைப்பு செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். திருப்புவனம் நாடார் உறவின்முறை தலைவர் செல்வபிரகாஷ் முன்னிலை வகித்தார். மாநில மகளிரணி துணைச்செயலாளர் விக்டோரியா பாக்யராஜ் வரவேற்றார். விழாவில் கலந்து கொண்டு பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில தலைவர் என்.ஆர்.தனபாலன் பேசியதாவது:-
திருப்புவனம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையில் கூட இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் காமராஜர் மீது எவ்வளவு அக்கறை கொண்டுள்ளனர் என்பதற்கு இதுதான் உதாரணமாகும். சிவகங்கை மாவட்டத்தில் நாடார் சமுதாய மக்கள் சிறுபான்மையினராக உள்ளனர். ஆனால் இந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்ததை பார்த்தபோது இந்த பகுதியிலும் நாடார் சமுதாய மக்கள் பெருமளவில் உள்ளனர் என தெரிகிறது. பெருந்தலைவர் காமராஜரின் 117-வது பிறந்த நாளையும், இந்தியாவின் 73-வது சுதத்திர தினத்தையும் தற்போது நாம் கொண்டாடி வருகிறோம்.
காமராஜர் நாட்டின் சுதந்திரத்திற்காக 10½ ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். அதன் பின்னர் அரசியலில் படிப்படியாக முன்னேறி தமிழகத்தின் முதல்-அமைச்சராக ஆனார்.
காமராஜர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் 27 ஆயிரம் பள்ளிகள் திறக்கப்பட்டது. அப்போது மாணவ-மாணவிகளுக்கு சத்துணவு திட்டத்தை தொடங்கி அதை செயல்படுத்தினார். இதன் மூலம் மாணவர்கள் கல்வியை பெற்று அவர்கள் முன்னேற்றம் அடைந்தனர். அதனால் தான் இன்று நாடு வளர்ச்சியடைந்துள்ளது. நம் நாட்டில் 56 சதவீதம் பேர் இளைஞர்கள் தான். இளைஞர்கள் நினைத்தால் சாதிக்க முடியும் என்று கருதிய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மாணவர்களை கனவு காணுங்கள் என்று கூறியதுடன் இளைஞர்கள், மாணவ-மாணவிகளின் நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து கலந்துகொண்டு அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
நாடார் சமுதாயத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க முயற்சி செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர். முதலில் நமது நாடார் சமுதாய மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நமது கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெறும் போது திரளான நாடார் சமுதாய மக்கள் கலந்து கொள்ள வேண்டும். அவ்வாறு கலந்துகொள்ளும் போது தமிழக அரசிடம் தெரிவித்து மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதற்கு கோரிக்கைகளை முன் வைக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.