பாலக்கோடு அருகே பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்; முதியவர் கைது

பாலக்கோடு அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவரை பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-08-19 22:00 GMT
பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பெல்ரம்பட்டி காலனியை சேர்ந்தவர் ராமன் (வயது 60). இவர் அந்த பகுதி ஊர்கவுண்டராக இருந்து வருகிறார். இவர், அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வரும் 14 வயது மாணவியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் இந்த சம்பவம் குறித்து பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ராமன் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா, முதியவர் ராமனை போக்சோ சட்டத்தில் கைது செய்தார். பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பாலக்கோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்