கோவில்பட்டியில் தொகுப்பு வீடுகள் கட்டும் பணியை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு

கோவில்பட்டியில தொகுப்பு வீடுகள் கட்டும் பணியை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு செய்தார்.

Update: 2019-08-19 22:45 GMT
கோவில்பட்டி, 

கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் குடிசைமாற்று வாரியம் சார்பில், தொகுப்பு வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு முதல்கட்டமாக ரூ.8 கோடி செலவில் அடுக்குமாடிகளில் 92 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. தற்போது இந்த பணிகள் நிறைவுபெறும் தருவாயில் உள்ளது.

மேலும் அங்கு 2-வது கட்டமாக ரூ.10 கோடியே 25 லட்சம் செலவில் அடுக்குமாடிகளில் 120 வீடுகள் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆகியோர் நேற்று மாலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது தொகுப்பு வீடுகளின் கட்டுமான பணிகளை விரைந்து நிறைவேற்றுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவுறுத்தினார்.

கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, சின்னப்பன் எம்.எல்.ஏ., தாசில்தார்கள் மணிகண்டன், மல்லிகா (சமூக பாதுகாப்பு திட்டம்), யூனியன் ஆணையாளர்கள் கிரி, மாணிக்கவாசகம், அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், ஆவின் இயக்குனர்கள் நீலகண்டன், மாரிமுத்து, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி ஒன்றிய துணை செயலாளர் செண்பகமூர்த்தி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

பின்னர் கோவில்பட்டி யூனியன் அலுவலக கூட்ட அரங்கில், ஒன்றிய அளவிலான அனைத்து குடிநீர் திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். அமைச்சர் கடம்பூர் ராஜூ அனைத்து குடிநீர் திட்ட பணிகளை விரைந்து நிறைவேற்றி, பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

ஊராட்சிகளின் உதவி இயக்குனர் உமாசங்கர், யூனியன் ஆணையாளர்கள் கிரி, மாணிக்கவாசகம், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் செந்தூர்பாண்டியன், நிர்வாக பொறியாளர் பாலசுப்பிரமணியன், பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்