சாண எரிவாயு கலன்கள் அமைக்க அரசு மானியம் - கலெக்டர் தகவல்
அரசு மானியத்துடன் சாண எரிவாயு கலன்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தேசிய கரிம எரிவாயு திட்டத்தின்கீழ் சிவகங்கை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் உள்ள வீடுகளில் சாண எரிவாயு கலன்கள் அரசு மானியத்துடன் அமைத்து கொடுக்கப்பட உள்ளது. பாதுகாப்பான, புகையற்ற, மாசற்ற இந்த கலன்களை வீடுகளில் அமைப்பதன் மூலம் சுகாதாரமான முறையில் வாழ்வதற்கு இது வழிவகுக்கும்.
மேலும் வீடுகளில் உள்ள உணவு கழிவு, விலங்குகளின் கழிவு மற்றும் விவசாய கழிவுகளை பயன்படுத்தி இந்த கலன்கள் அமைக்கப்படும்.
பயிற்சி பெற்ற தொழில்நுட்ப உதவியாளர்களை கொண்டு இந்த கலன்கள் அமைக்கப்பட்டு பயனாளிகளுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படும். மேலும் சாண எரிவாயு கலன்களை வீடுகளில் பயன்படுத்துவதால் இயற்கையை பாதுகாப்பதுடன் மட்டுமல்லாமல் சிலிண்டர் எரிவாயுவின் செலவு தொகை சேமிக்கப்படுகிறது.
எனவே இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் தங்கள் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களின் வட்டார வளர்ச்சி அலுவலர்களை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.