எல்.ஐ.சி. துணை நிறுவனத்தில் 300 காலியிடங்கள்

எல்.ஐ.சி. நிறுவனத்தின் துணை நிறுவனத்தில் 300 பேருக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.;

Update: 2019-08-19 09:29 GMT
இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்று எல்.ஐ.சி. ஆயுள் காப்பீட்டு நிறுவனமான இதன் கீழ் ஹவுசிங் பினான்ஸ் லிமிடெட் எனப்படும் வீட்டுக்கடன் நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் அசிஸ்டன்ட் மேனேஜர், அசோசியேட், அசிஸ்டன்ட் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அசிஸ்டன்ட் மேனேஜர் பணிக்கு 100 இடங்களும், அசிஸ்டன்ட் பணிக்கு 125 இடங்களும், அசோசியேட் பணிக்கு 75 இடங்களும் உள்ளன. மொத்தம் 300 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-1-2019-ந் தேதியில் 21 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

எம்.பி.ஏ., பிஜி.டி.பி.ஏ., பி.ஜி.டி.பி.எம்., பி.ஜி.பி.எம்., பி.ஜி.டி.எம். முதுநிலை படிப்பு மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகளை படித்தவர்கள் அசிஸ்டன்ட் மேனேஜர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

பட்டப்படிப்பு படித்தவர்கள் அசிஸ்டன்ட் மற்றும் அசோசியேட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விருப்பம் உள்ளவர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். வருகிற 26-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இதற்கான ஆன்லைன் தேர்வு அக்டோபர் 9 அல்லது 10-ந் தேதியில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://www.lichousing.com/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.

மேலும் செய்திகள்