கவர்னர் மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்ட 15 ஆயிரம் சதுர அடி பதுங்கு குழி அருங்காட்சியகமாக மாற்றம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்
கவர்னர் மாளிகையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவிலான பதுங்குகுழி, பாதாள அறைகள் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. இதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்தார்.
மும்பை,
மராட்டிய மாநில கவர்னர் மாளிகை, மும்பை மலபார்ஹில் பகுதியில் அமைந்துள்ளது. இது ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கட்டிடம் ஆகும்.
கடந்த 2016-ம் ஆண்டு இந்த கவர்னர் மாளிகை வளாகத்தில் புதிய கட்டுமான பணிக்காக பூமியை தோண்டும்போது அங்கு, 20 அடி உயரம் கொண்ட பிரமாண்ட வாயிலை கொண்டதும், சுமார் 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டதுமான பதுங்குகுழியும், அதனுள் பாதாள அறைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த பதுங்கு குழிக்குள் மொத்தம் 13 அறைகள் உள்ளன.
ஆபத்து காலத்தில் வீரர்கள் தங்குவதற்கும், ஆயுதங்களை மறைத்து வைக்கவும் அந்த அறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பூமிக்கு அடியில் இருக்கும் இந்த அறைகளுக்கு காற்று, வெளிச்சத்தை தரும் வசதிகளும் உள்ளன.
இவை 19-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை. எதிரி நாட்டு கப்பல்களை அழிக்க இங்கு பீரங்கி குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த பதுங்கு குழியும், பாதாள அறைகளும் அப்படியே பழமை மாறாமல் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.
இதை நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்தார். மேலும் அந்த பாதாள அறைகளின் தாழ்வான பகுதிகளில் குனிந்து சென்று அவர் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தார்.
இந்த அருங்காட்சியகத்தை வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்.
அருங்காட்சியகத்துக்குள் பதுங்கு குழியின் வரலாறு மற்றும் பதுங்கு குழியின் மறு சீரமைப்பு ஆகியவற்றை விவரிக்கும் ஆடியோ வர்ணனையும் இடம் பெறும் என தகவல்கள் கூறுகின்றன.
அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ள இந்த பாதாள அறைகளை பொதுமக்கள் ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்து, நேரில் பார்க்கும் வசதி செய்து தரப்படும். அருங்காட்சியக திறப்பு விழாவில் ஜனாதிபதியுடன் அவரது மனைவி சவிதா கோவிந்த், மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர்ராவ், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், வருவாய்த்துறை மந்திரி சந்திரகாந்த் பாட்டீல், உயர்கல்வித்துறை மந்திரி வினோத் தாவ்டே உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.