மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே சுற்றுப்பயணம்
மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் ஆதித்ய தாக்கரே சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.
மும்பை,
மராட்டியத்தில் பெய்த கனமழை காரணமாக கொங்கன் பகுதியும், மேற்கு மாவட்டங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. தற்போது அந்த பகுதிகள் இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்கனவே சிவசேனா சார்பில் உணவு தானியங்கள், சமையல் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், ஆடைகள், மருந்து போன்ற நிவாரணப்பொருட்கள் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே மற்றும் இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொங்கன் மற்றும் மேற்கு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கிறார்கள்.
இது குறித்து சிவசேனா கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
ஆதித்ய தாக்கரே இன்று (திங்கட்கிழமை) மகாட் பகுதிக்கு செல்கிறார். பின்னர் அங்கு இருந்து நாளை(செவ்வாய்க்கிழமை) கோலாப்பூருக்கும், நாளை மறுநாள்(புதன்கிழமை) சாங்கிலிக்கும் செல்ல உள்ளார்.
உத்தவ் தாக்கரே நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய நாட்களில் கோலாப்பூர் மற்றும் சாங்கிலி ஆகிய மாவட்டங்களுக்கு செல்ல உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது வெள்ளத்தில் மூழ்கி 17 பேர் பலியான சாங்கிலி மாவட்டத்தில் உள்ள பிரக்மனால் கிராமத்துக்கு உத்தவ் தாக்கரே செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல 26-ந் தேதிக்கு பிறகு ஆதித்ய தாக்கரே தனது ‘ஜன் ஆசிர்வாத்’ யாத்திரையை மீண்டும் தொடங்க உள்ளார்.