புறக்காவல் நிலையங்களை அரசு நிதி ஒதுக்கீட்டில் மேம்படுத்த வலியுறுத்தல்
போலீஸ் மற்றும் புறக்காவல் நிலையங்களில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு நிதி ஒதுக்கீட்டை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிற நிதி ஆதாரங்களை தவிர்க்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
தமிழக அரசு மாநிலம் முழுவதும் போலீஸ் நிலையங்களிலும், போலீஸ் நிர்வாக அலுவலகங்களிலும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தேவையான நிதி ஒதுக்கீட்டை செய்து வருகிறது. வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் போலீஸ் நிலையங்களுக்கு விசாலமான சொந்த கட்டிடங்கள் கட்டித் தரப்படுகின்றன. அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்திலும் பல போலீஸ் நிலையங்களுக்கு புதிதாக சொந்த கட்டிடங்கள் கட்டி தரப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் நிலையங்களில் பணிகள் யாவும் கணினி மயமாக்கப்பட தேவையான சாதனங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதனால் போலீஸ் நிலையங்களில் செயல்திறன் மேம்பட்டுள்ளது.
இதுதவிர போலீஸ் நிலையங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணியை மேம்படுத்த முக்கிய இடங்களில் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட தேவையான நிதி ஒதுக்கீட்டினை மாவட்ட போலீஸ் நிர்வாகம் மதிப்பீடு தயாரித்து அரசிடம் இருந்து நிதி ஒதுக்கீடு பெற்று செய்ய வேண்டும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்படும் போது அதற்கு முறையான நிதி ஒதுக்கீடு பெறாமல் பிற நிதிஆதாரங்களை தேடும் நிலை நடைமுறையில் உள்ளது.
இந்த நடைமுறையினால் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தின் செயல்பாட்டில் பாரபட்சம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குற்றங்களை தடுக்க பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், விபத்துகளை தடுக்க தேவையான இடங்களில் தடுப்பு வேலிகளை அமைத்தல் போன்றவற்றுக்கு சேவை சங்கங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் தாமாக முன்வந்து உதவி செய்தால் அதனை ஏற்றுக்கொள்வதில் பிரச்சினைகள் ஏதும் இருக்காது. ஆனால் போலீஸ் மற்றும் புறக்காவல் நிலைய மேம்பாட்டிற்கு பிற நிதிஆதாரங்களை பெறுவது என்பது ஏற்புடையது அல்ல. சில போலீஸ் நிலைய அதிகாரிகள் அதிக ஆர்வத்தால் உயர் அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது போலீஸ் நிலைய கட்டிடங்கள் மற்றும் அலுவலகங்கள் ஆகியற்றை அரசு நிதி ஒதுக்கீடு இல்லாமல் மராமத்து செய்வதற்கும் நிதி ஆதாரங்களை தேடும் நிலை உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
எனவே மாவட்ட போலீஸ் நிர்வாகம் அரசு தரும் நிதி ஒதுக்கீட்டை பயன்படுத்தியே போலீஸ் நிலையம் மற்றும் புறக்காவல் நிலைய மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிறவகையில் இதற்காக நிதி ஆதாரங்களை பயன்படுத்துதல் முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும் என்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனைபின் பற்றாத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கையை மாவட்ட போலீஸ் நிர்வாகம் எடுக்க வேண்டியதும் அவசியம் ஆகும்.