சேரன்மாதேவி அருகே ஆம்னி வேன் பாலத்தில் மோதி கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலி - 3 பேர் படுகாயம்

சேரன்மாதேவி அருகே ஆம்னி வேன் பாலத்தில் மோதி கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-08-18 22:15 GMT
சேரன்மாதேவி, 

தென்காசி அருகில் உள்ள மேலகரம் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார்(வயது42). இவரும், நண்பர்களும் ஆம்னி வேனில் சேரன்மாதேவியில் இருந்து தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்தனர். புதுக்குடி அருகே சென்றபோது வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. சிறிது தொலைவில் இருந்த பாலத்தில் வேன் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் தினேஷ்குமார் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சேரன்மாதேவி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், 4 பேரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ்குமார் பரிதாபமாக இறந்து போனார். மற்ற 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்