சேலம் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

சேலம் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

Update: 2019-08-17 22:43 GMT
சேலம்,

சேலம் மாவட்டத்தில் சுதந்திர தின விழா பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம் கல்லேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் அமுதா தலைமை தாங்கினார். தேசியகொடியை குமார் ஏற்றினார். மேலும் மாணவ, மாணவிகள் 73-வது சுதந்திர ஆண்டை வெளிப்படுத்தும் விதமாக 73 என்ற வடிவில் அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இடங்கணசாலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித்தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினார். இதில் வங்கி செயலாளர் முருகன், காசாளர் சித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இடங்கணசாலை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் செயல் அலுவலர் ராஜ விஜயகணேசன் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

கருப்பூர்

அய்யம்பாளையம் அரசு பள்ளியில் நடந்த விழாவுக்கு தலைமை ஆசிரியர் சரவணன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழுதலைவர் வையாபுரி தேசிய கொடியேற்றி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

சேலம் கருப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற விழாவில் கூட்டுறவு சங்கத்தலைவர் கோவிந்தசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். இதில் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் ஆறுமுகம், துணைத்தலைவர் அங்கப்பன் மற்றும் இயக்குனர்கள் கலந்து கொண்டனர். தலைவாசல் அருகே சித்தேரி தொடக்கப்பள்ளியில் நடந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் தங்கம் தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

தாரமங்கலம்

தாரமங்கலம் ஒன்றியம் மல்லிக்குட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். விழாவில் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதே போல சன்னதி வீதி அரசு தொடக்கப்பள்ளி, எம்.ஜி.ஆர். காலனியில் உள்ள தொடக்கப்பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

தாரமங்கலம் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த விழாவிற்கு வட்டார தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். பொது செயலாளர் லட்சுமணன் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். கொளத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் பேரூராட்சி செயல் அலுவலர் ஞானசுந்தரம் தேசிய கொடியேற்றினார். பின்னர் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் 2 ஆயிரம் மரக்கன்றுகள் பேரூராட்சி பகுதிகளில் நடப்பட்டன.

சங்ககிரி

சங்ககிரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில் உதவி கலெக்டர் அமிர்தலிங்கம் தேசிய கொடியை ஏற்றி இனிப்பு வழங்கினார். இதில் சங்ககிரி தாசில்தார் (பொறுப்பு) கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஆணையாளர் அனுராதா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சங்ககிரி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் துணை சூப்பிரண்டு தங்கவேல் தேசிய கொடி ஏற்றினார். சங்ககிரி பேரூராட்சி வளாகத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணி தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.

மேலும் செய்திகள்