வடலூரில் ஆம்னி பஸ் கவிழ்ந்தது; பட்டதாரி பெண் பலி
வடலூரில் ஆம்னி பஸ் கவிழ்ந்த விபத்தில் பட்டதாரி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் 20 பேர் படுகாயமடைந்தனர்.;
வடலூர்,
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னைக்கு தனியார் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பஸ்சை பட்டுக்கோட்டையை சேர்ந்த ராஜா(வயது 40) என்பவர் ஓட்டினார். இந்த பஸ் நேற்று அதிகாலை 2 மணியளவில், கடலூர் மாவட்டம் வடலூர் ஆசிரியர் பயிற்சி நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் நடுவில் இருந்த தடுப்புக்கட்டையில் மோதி, சாலையோரம் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த பேராவூரணி வி.டி.எம். கோட்டையை சேர்ந்த அசோகன் மகள் எம்.எஸ்சி. பட்டதாரியான ஹரிணி(24) என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பஸ்சில் பயணம் செய்த பேராவூரணியை சேர்ந்த தமிழரசன், செல்வி, ஆயிசா, உமாபதி, பத்மா, ஹரிபிரசாத், மல்லிகா, சிவகுமார், இளங்கோ, வெங்கடேசன் உள்ளிட்ட 20 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே இதுபற்றி அறிந்த வடலூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் பலியான ஹரிணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து கிரேன் எந்திரம் மூலம் சாலையோரம் கவிழ்ந்த பஸ்சை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். இந்த விபத்தால் கடலூர்-விருத்தாசலம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.