“திருச்சி தொகுதி எம்.பி.யை காணவில்லை” போலீசில் புகார் கொடுக்க வந்த அரசியல் கட்சியினரால் பரபரப்பு
திருச்சி தொகுதி எம்.பி. திருநாவுக்கரசரை காணவில்லை என்று போலீசில் அரசியல் கட்சியினர் புகார் கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பொன்மலைப்பட்டி,
அகில இந்திய மஜ்லீஸ் கட்சி மாவட்ட தலைவர் சும்சுதீன் தலைமையில் அக்கட்சியினர் அரியமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அங்கு அவர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தரசுவிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர்.
அந்த புகார் மனுவில், திருச்சி அரியமங்கலம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 29-வது வார்டு அண்ணா நகர் பகுதியில் சாலை வசதி இல்லை எனவும், இந்தப் பகுதியில் இருந்து தஞ்சை பிரதான சாலைக்கு செல்ல கூடியது எனவும், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாய் இந்த சாலைக்காக போராடி வருவதாகவும், தற்போது உள்ள திருச்சி தொகுதி எம்.பி. திருநாவுக்கரசர் மூலமாக சாலை வசதி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக இது சம்பந்தமாக அவரை பார்க்கலாம் என்றால், அவர் எங்கு இருக்கிறார்? என்று தெரியவில்லை என்றும், தொகுதியை விட்டு காணாமல் போன எம்.பி.யை கண்டுபிடித்து தருமாறும் கூறப்பட்டிருந்தது.
பரபரப்பு
ஆனால் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தரசு, அந்த புகார் மனுவை பெற்றுக்கொள்ளவில்லை. மாறாக, திருச்சி தொகுதி எம்.பி.யின் உதவியாளரிடம் தொலைபேசியில் பேசினார். பின்னர், எம்.பி. திருச்சிக்கு வரும் போது, இந்த பிரச்சினை சம்பந்தமாக சந்திக்க ஏற்பாடு செய்வதாக எம்.பி.யின் உதவியாளர் உறுதி அளித்துள்ளதாக கூறி புகார் மனு கொடுத்தவர்களை சமரசம் செய்தார்.
அதைத்தொடர்ந்து, அவர்கள் கொடுத்த புகார் மனுவை திரும்ப பெற்று கொண்டு அங்கிருந்து சென்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய மஜ்லிஸ் கட்சி மட்டுமின்றி, தே.மு.தி.க., நாம் தமிழர் ஆகிய கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் மற்றும் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் சிலரும் மனு கொடுக்க வந்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.