பாதுகாப்புத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சியை எதிர்த்து ஊர்வலம் தொழிலாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்
மத்திய அரசு நாட்டில் உள்ள பாதுகாப்புத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க முயற்சி செய்வதை கண்டித்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆவடியில் போராட்டம் நடத்தினர்.;
ஆவடி,
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 41 பாதுகாப்புத் துறை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேற்கண்ட நிறுவனங்களில் 82 ஆயிரம் தொழிலாளர்களும், 40 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிறுவனங்களை பொதுத் துறை நிறுவனமாக மாற்றி தனியார் மயமாக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த முடிவை அமல்படுத்துவதற்கான வரைவு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் விரைவில் வர உள்ளது. இதனை கண்டித்து பல்வேறு பாதுகாப்பு துறை நிறுவனங்களை சேர்ந்த தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இதற்கிடையில், பாதுகாப்புத்துறை தொழிலாளர்களின் அனைத்து சம்மேளனங்கள், தொழிற்சங்கங்கள் கூட்டாக ஒரு மாத கால வேலை நிறுத்தத்திற்கான அழைப்பு விடுத்து உள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை ஆவடியில் உள்ள படைத்துறை உடைத்தொழிற்சாலை, டேங்க் பேக்டரி, என்ஜின் பேக்டரி ஆகிய தொழிற்சாலைகளில் இருந்து ஊழியர்கள் குடும்பத்துடன் சுமார் 3 ஆயிரம் பேர் ஊர்வலமாக புறப்பட்டு, ஆவடி அஜய் மைதானத்தில் குவிந்தனர். பின்னர் அங்கு தொழிலாளர்கள் மத்திய அரசின் போக்கை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
அதன் பின்னர், நடைபெற்ற கண்டன கூட்டத்தில் தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன் உள்பட தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.