மத்திய மருத்துவ மையங்களில் 1355 பணியிடங்கள்
எய்ம்ஸ் மற்றும் மத்திய மருத்துவ மையத்தில் 1355 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக எய்ம்ஸ் (AIIMS) என்று அழைக்கப்படுகிறது. தற்போது புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் கிளையில் நர்சிங் அதிகாரி பணிக்கு 503 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆகஸ்டு 21-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பி.எஸ்சி. நர்சிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு, கட்டணத்தில் விதிவிலக்கு பின்பற்றப்படுகிறது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற ஆகஸ்டு 21-ந் தேதியாகும். இதற்கான தேர்வு செப்டம்பர் 15-ந் தேதி நடக்க உள்ளது. இது பற்றிய விரிவான விவரங்களை https://www.aiimsexams.org/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.