வாழவச்சனூரில், ரூ.10 லட்சம் மதிப்பிலான கரும்புகள் தீயில் எரிந்து நாசம்
வாழவச்சனூரில் ரூ.10 லட்சம் மதிப்பிலான கரும்புகள் தீயில் எரிந்து நாசமானது.;
வாணாபுரம்,
இந்த நிலையில் நேற்று மின் வயர்கள் ஒன்றுடன் ஒன்று உரசியதால் தீப்பொறி ஏற்பட்டு உள்ளது. இந்த தீப்பொறி சேகர் நிலத்தில் உள்ள கரும்பு பயிர் மீது விழுந்துள்ளது. இதனால் கரும்பு பயிர்கள் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதனையடுத்து சேகர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார். இருப்பினும் தீ காற்றின் வேகத்தால் அருகில் உள்ள செல்வம், வேலு, ராஜேந்திரன் ஆகியோரின் நிலத்தில் பயிரிட்டு உள்ள கரும்பிலும் தீ பரவியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை தீயணைப்பு வீரர்கள், வாணாபுரம் போலீசார் மற்றும் பொதுமக்கள் மேலும் தீ பரவாமல் தடுத்து அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான கரும்புகள் எரிந்து நாசமானது.
வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் கரும்பு பயிர் சாகுபடி செய்து உள்ளனர். வாழவச்சனூர் பகுதியை சேர்ந்த விவசாயி சேகர் என்பவர் அந்த பகுதியில் உள்ள தனது 1 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டு இருந்தார். அவருடைய நிலத்தின் வழியாக செல்லும் உயர் மின்னழுத்த மின்சார வயர்கள் தாழ்வாக செல்கிறது.