நாமக்கல்லில், தற்காலிகமாக சட்டக்கல்லூரி செயல்பட உள்ள வளாகத்தில் அமைச்சர் தங்கமணி ஆய்வு
நாமக்கல்லில் சட்டக்கல்லூரி தற்காலிகமாக செயல்பட உள்ள டான்சி நிறுவன வளாகத்தை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக சட்டக்கல்லூரி அமைக்க ரூ.3 கோடியே 17 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஜூலை மாதம் 10-ந் தேதி சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் விரைவில் புதிய சட்டக்கல்லூரி அமைக்கப்பட உள்ளது. சட்டக்கல்லூரிக்கு இடம் தேர்வு செய்து புதிய கட்டிடங்கள் கட்டும் வரை நாமக்கல் - திருச்சி ரோட்டில் அமைந்து உள்ள டான்சி நிறுவன வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் தற்காலிகமாக சட்டக்கல்லூரி செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதையொட்டி நேற்று நாமக்கல்லில் உள்ள டான்சி நிறுவன வளாகத்தை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சட்டக்கல்லூரி தற்காலிகமாக செயல்பட தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம், நாமக்கல் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், சப்-கலெக்டர் கிராந்தி குமார், சட்டக்கல்லூரி முதல்வர் மற்றும் தனிஅலுவலர் டாக்டர் ராஜேஸ்வரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வள்ளுவன் மற்றும் அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அதைத்தொடர்ந்து நாமக்கல் சட்டக்கல்லூரிக்கான இடத்தை தேர்வு செய்வதற்காக வள்ளிபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தையும், நாமக்கல் கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளிக்கான இடத்தை தேர்வு செய்ய பெரியபட்டியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுகளின் போது அரசு வக்கீல் தனசேகரன், நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சுதா, தாசில்தார் பச்சைமுத்து உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே நாமக்கல்லில் நிருபர்களிடம் பேட்டி அளித்த அமைச்சர் தங்கமணி கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் நாமக்கல்லில் ஒரு வார காலத்திற்குள் சட்டக்கல்லூரி திறக்கப்பட உள்ளது. தற்காலிகமாக டான்சி நிறுவன வளாகம் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. புதிய இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டிடம் கட்டப்பட்ட பிறகு சட்டக்கல்லூரி அங்கு மாற்றப்படும்.
ஊட்டியில் பெய்த மழையின்போது சிக்கி இருந்த 60 மின்சார வாரிய தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். அங்கு மின் உற்பத்தியும் ஒரு சில நாட்களில் தொடங்கப்பட உள்ளது. இன்று (நேற்று) மாலைக்குள் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து 2 நாட்களில் முழுமையாக மின்வினியோகம் வழங்கப்படும். வேலூர் தொகுதியில் வெற்றி எங்களுக்கு தான். 3 தொகுதிகள் நாங்களும், 3 தொகுதியில் அவர்களும் (தி.மு.க.) வெற்றி பெற்று உள்ளனர். இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.