பெண் கொடுக்க மறுத்ததால் மோட்டார்சைக்கிளுக்கு தீவைத்த வாலிபர் கைது
முத்துப்பேட்டை அருகே பெண் கொடுக்க மறுத்ததால் மோட்டார்சைக்கிளுக்கு தீவைத்து வீட்டு பொருட்களை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
முத்துப்பேட்டை,
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள தொண்டியக்காடு புதுக்குடி பகுதியை சேர்ந்தவர் உத்திராபதி. இவருடைய மனைவி புஷ்பராணி (வயது 43). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். புஷ்பராணியின் தம்பி அதே பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (26). இவருக்கு, புஷ்பராணியின் மகளை பெண் கொடுப்பதாக கூறி இருந்தனர்.
இந்தநிலையில் உத்திராபதியும், புஷ்பராணியும் பெண் கொடுக்க முடியாது என மாரிமுத்துவிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து உத்திராபதியின் வீட்டிற்கு சென்று அங்கிருந்த மேஜை, டேபிள், டி.வி. உள்ளிட்ட பொருட் களை கடப்பாரையால் அடித்து உடைத்துள்ளார். மேலும் வீட்டின் வாசல் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீ வைத்து கொளுத்தினார்.
கைது
இதுகுறித்து புஷ்பராணி முத்துப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.