உணவு பொருட்களின் மானியத்தை குறைத்துள்ள மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

உணவு பொருட்களின் மானியத்தை குறைத்துள்ள மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திருவாரூரில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2019-08-09 22:30 GMT
திருவாரூர், 

அத்தியாவசிய பொருட்களின் அளவை குறைத்துள்ளதையும், ஒரு லட்சம் வருமானம் உள்ளவர்கள், 3 அறைகள் கொண்ட கான்கிரீட் வீடு உள்ள குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள் இல்லை என அரசு அறிவிக்கப்பட உள்ளதை கண்டித்தும், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் முழுமையாக வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று திருவாரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் தமயந்தி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஜென்னிமார்க்ஸ், அன்னபாக்கியம், கவிதா, விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வி ராஜா தலைமை தாங்கினார். ஒன்றிய துணைத்தலைவர்கள்் கவிதா, மணிமேகலை, தங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய பொருளாளர் ஜோதி, ஒன்றிய துணை செயலாளர்கள் வசந்தா, ரேணுகா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜமுனா, விஜயா உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக திருத்துறைப்பூண்டி-வேதாரண்யம் சாலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தாசில்தார் அலுவலகம் முன்பு வந்தடைந்தனர்.

நீடாமங்கலம் தாசில்தார் அலுவலகம் முன்பு இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சம்மேளன மாவட்ட செயலாளர் மாலாபாண்டியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சுலோச்சனா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் நடேச.தமிழார்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் செய்திகள்