போதைப்பொருள் பயன்படுத்தியதை கண்டித்த தந்தையை கத்தியால் குத்திவிட்டு வாலிபர் தற்கொலை
போதைப்பொருள் பயன்படுத்தியதை கண்டித்த தந்தையை கத்தியால் குத்திவிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மும்பையில் நடந்து உள்ளது.
மும்பை,
மும்பை செம்பூர் கட்லா பகுதியை சேர்ந்தவர் சுரஜ் (வயது30). இவர் சம்பவத்தன்று போதையில் வீட்டுக்கு வந்து உள்ளார். போதைப்பொருளை பயன்படுத்தியதற்காக அவரை தந்தை சங்கர் சிங் (60) கண்டித்து உள்ளார். இதனால் தந்தை, மகன் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஒரு கட்டத்தில் கடும் ஆத்திரமடைந்த சுரஜ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தந்தை என்றும் பாராமல் சங்கர் சிங்கை சரமாரியாக குத்தினார். இதில், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
இதையடுத்து தந்தை உயிரிழந்துவிட்டதாக நினைத்த சுரஜ், தன்னை தானே கத்தியால் குத்தி கொண்டார்.
இந்தநிலையில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சதாப்தி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சுரஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தந்தை சங்கர்சிங்குக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தந்தையை கத்தியால் குத்திவிட்டு மகன் தற்கொலை செய்த சம்பவம் செம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து கோவண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.