புதுக்கோட்டை, அம்மாபட்டினம் தபால் நிலையத்தை முற்றுகையிட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர்-67 பேர் கைது
மத்திய அரசின் அலுவலகங்களை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடத்தப்பட்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.;
புதுக்கோட்டை,
இதேபோல் மணமேல்குடி அடுத்த அம்மாபட்டினம் தபால் நிலையத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தலைவர் சாலிஹ் தலைமையில் முற்றுகையிட்ட 37 பேரை மணமேல்குடி போலீசார் கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரையும் மாலையில் போலீசார் விடுவித்தனர்.
மத்திய பா.ஜ.க. அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள மத்திய அரசின் அலுவலகங்களை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடத்தப்பட்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதேபோல புதுக்கோட்டையில் உள்ள தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட போவதாக புதுக்கோட்டை மேற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி புதுக்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று மாலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் முகமது ஜியாவுதீன் தலைமையில், கட்சியினர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் காசிநாததுரை கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து கண்டன உரையாற்றினார். இதில் கலந்து கொண்டவர்கள் மாநில சுயாட்சிக்கு எதிரான என்.ஐ.ஏ., யு.ஏ.பி.ஏ., ஆர்.டி.ஐ. சட்டதிருத்தம், காஷ்மீர் சுயாட்சி (370) சட்டம் ரத்து ஆகியவற்றிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட புதுக்கோட்டை டவுன் போலீசார் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 30 பேரை கைது செய்து புதுக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இதேபோல் மணமேல்குடி அடுத்த அம்மாபட்டினம் தபால் நிலையத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தலைவர் சாலிஹ் தலைமையில் முற்றுகையிட்ட 37 பேரை மணமேல்குடி போலீசார் கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரையும் மாலையில் போலீசார் விடுவித்தனர்.