வேலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை 21 சுற்றுகளாக நடந்தது
வேலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. 14 மேசைகள் வீதம் 21 சுற்றுகளில் வாக்குகள் எண்ணப்பட்டன.
வேலூர்,
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் ரூ.11 கோடி கைப்பற்றப்பட்டதன் காரணமாக ரத்து செய்யப்பட்ட வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் கடந்த 5-ந் தேதி நடந்தது. இதில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக ஏ.சி.சண்மும், தி.மு.க. வேட்பாளராக டி.எம்.கதிர்ஆனந்த், நாம்தமிழர் கட்சி வேட்பாளராக தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை வாலாஜாவை அடுத்த ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் நடந்தது. இதற்காக தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் சட்டமன்ற தொகுதிவாரியாக ‘ஸ்ட்ராங்’ அறைகளில் வைத்து சீல் வைக்கப்பட்டிருந்தது.
மேலும் துணை ராணுவப்படைவீரர்கள், உள்ளூர் போலீசாரை கொண்டு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும் கண்காணிக்கப்பட்டது. தற்போது மழைபெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தின்மீது 2 இடிதாங்கிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தடுப்புகள் அமைத்து வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்றவர்கள் சோதனைசெய்யப்பட்டு அனுப்பப்பட்டனர். வாக்கு எண்ணும் மையவளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.
அதிகாலை முதலே வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் வந்தனர். அவர்கள் அடையாள அட்டை வைத்துள்ளார்களா? என்பதை சரிபார்த்து போலீசார் உள்ளே செல்ல அனுமதித்தனர். செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
காலை 7.30 மணிக்கு தேர்தல் பொதுப்பார்வையாளர் சுதம்காதே பண்டாரியா, மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரம் ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் சீல் அகற்றப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துசெல்லப்பட்டன.
பின்னர் 8 மணிக்கு தபால் ஓட்டுகள் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளின் சீல் அகற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து தபால் ஓட்டுகளும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணும் பணி தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கைக்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 14 மேசைகள் போடப்பட்டிருந்தன. இதனால் ஒவ்வொரு சுற்றும் 14 மேசைகளில் நடந்தது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை 21 சுற்றுகளாக எண்ணி முடிக்கப்பட்டது. மாலை 3.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தது. ஒவ்வொரு சுற்றும் முடிவடைந்ததும் வாக்கு எண்ணிக்கை மையத்தின் வெளியே ஒலிபெருக்கி மூலம் அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதல் முடிவு வரை பரபரப்பாக இருந்தது.
சட்டமன்ற தொகுதிவாரியாக வேலூர், ஆம்பூர் தொகுதி வாக்குகள் 18 சுற்றுகளிலும், அணைக்கட்டு, கே.வி.குப்பம், வாணியம்பாடி ஆகிய சட்டமன்ற தொகுதி வாக்குகள் 20 சுற்றுகளாகவும், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி வாக்குகள் 21 சுற்றுகளாகவும் நடந்தது.